General25 June 2026

“நெல் கொள்முதல் விலை உயர்த்தினால் அரிசி விலையை ஆலை உரிமையாளர்கள் அதிகரிப்பர்”

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை 150 ரூபாவாக உயர்த்தினால், அதற்கு இணையாக அரிசி விலையையும் அதிகரிப்பதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்திருப்பதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்வதில் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால்காந்த, "நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்முதல் செய்யும் விலையை அதிகரிப்பதா? அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வழங்கும் முறையை உருவாக்குவதா? என்பது குறித்து சிக்கல் நிலவுகிறது.

நெல் விலையை 150 ரூபா வரை கொண்டு சென்றால், அரிசி விலையை அதிகரிக்க ஆலை உரிமையாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு நடந்தால் பொது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும். இப்படியொரு பிரச்சினை இங்கு உள்ளது.

எனினும், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவுக்கு நிகரான விலையை வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்." என்றார்.
Related recommendation
Hiru TV News | Programmes