வெனிசுலாவின் கடற்கரையோரப் பகுதியில் 7.1 மெக்னிடியூட் வலுவளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் தலைநகரான கராகஸ் (Caracas) உட்பட பல பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்ததைத் தொடர்ந்து, மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் கராகஸ் நகரில் கட்டடங்களின் பக்கவாட்டுச் சுவர்களில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, புவேர்ட்டோ ரிகோ (Puerto Rico) மற்றும் வெர்ஜின் தீவுகளுக்கு (Virgin Islands) அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பினால் ஆரம்பகட்ட ஆழிப்பேரலை அச்சுறுத்தல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஹெய்ட்டியை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி
ஸ்கொட்லாந்தை 3 - 0 என வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி
வெனிசுலா கடற்கரையோரம் 7.1 மெக்னிடியூட் வலுவான நிலநடுக்கம்!
பிள்ளையானுடன் இருக்கும் படங்கள் குறித்து கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றில் விளக்கம்!
‘ட்ரில்லியனர்’ அந்தஸ்தை இழந்தார் ஈலோன் மஸ்க்!
போஸ்னியா-ஹெர்சகோவினா வெற்றி - தொடரிலிருந்து கட்டார் வெளியேற்றம்
கனடாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி!
பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளுக்காக சுகாதார அமைச்சினால் விசேட ஆரோக்கிய உணவுப் பட்டியல் வெளியீடு!
“நெல் கொள்முதல் விலை உயர்த்தினால் அரிசி விலையை ஆலை உரிமையாளர்கள் அதிகரிப்பர்”
நிலைமை தீவிரம்: டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!