General25 June 2026

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியில் தண்டனை - சஜித் கோரிக்கை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) ஜனாதிபதியின் உரைக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தவித பாகுபாடுமின்றித் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நிற்கிறது.
இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடைய எவருக்கும் எமது கட்சியில் இடமில்லை. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி கூறுவதை நாம் நிராகரிக்கிறோம். போதைப்பொருளை ஒழிப்பதற்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட வேண்டும்."எனத் தெரிவித்தார்.

தற்போதைய போதைப்பொருள் அச்சுறுத்தல் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் சிறையில் அடைக்கப்படும் அதேவேளை, அவர்கள் சிறையிலிருந்தபடி தங்களது கடத்தல் வலையமைப்பைத் தொடர்ந்து இயக்குவதற்கு இடமளிக்கக் கூடாது என எச்சரித்தார்.

இவ்வாறான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்குச் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற கடுமையான தண்டனை முறைகளை இலங்கையில் இப்போது செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும், போதைப்பொருளை ஒழிப்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பும் எதிர்க்கட்சியின் கோரிக்கையுமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை!   மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.  இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே  அவர் இதனை  தெரிவித்துள்ளார்.   மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன.  துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது.  மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை

மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை! மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு...
Read more
Hiru TV News | Programmes