உலக சந்தையில் எரிபொருளின் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்
எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
"டீசலுக்கு 100 ரூபாயும், பெட்ரோலுக்கு 20 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. எரிபொருள் மானியத்தை சமமாக வழங்குவதில்லை. தற்போது மானியத்திற்காக அமைச்சரவையினால் 57 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
விலை திருத்தம் செய்யப்படுவது குறித்து இப்போது கூற முடியாது. உலக சந்தையின் விலைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கும். மார்ச் மாதத்தில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் யுத்த சூழல் ஆரம்பமான காலகட்டம் அது. போருக்கான முடிவை யார் எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.
உலக சந்தையில் விலை அதிகரித்ததன் காரணமாகவே இலங்கை சந்தையிலும் விலை அதிகரித்தது. உலக சந்தையில் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நன்மையை மக்களுக்கு வழங்குவோம். விலை குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்."
உலக சந்தையில் விலை அதிகரித்ததன் காரணமாகவே இலங்கை சந்தையிலும் விலை அதிகரித்தது. உலக சந்தையில் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நன்மையை மக்களுக்கு வழங்குவோம். விலை குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்."
Latest News
மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை! மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.
Local
25 June 2026
2.5 மில்லியன் டொலர் கொள்ளை: பொறுப்பில் இருந்து நழுவுகிறதா மத்திய வங்கி? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
Local
25 June 2026
எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது.. உலக சந்தையில் விலை குறையும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் - வலுசக்தி அமைச்சர்
Local
25 June 2026
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் !
Local
25 June 2026
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியில் தண்டனை - சஜித் கோரிக்கை
Local
25 June 2026
கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலை!
Local
25 June 2026
தெல்தெனிய சம்பவம் - கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு
Local
25 June 2026
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Local
25 June 2026
2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!
Local
25 June 2026