General27 June 2026

அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகள் மீது 100% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் உடனடியான 100% வரி விதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து டிஜிட்டல் சேவை வரியை நடைமுறைப்படுத்த பல ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பாகச் செயல்படும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes