Sports27 June 2026

கால்பந்தாட்டத்தில் 'ஹெட்ரிக் சாதனை புரிந்த பிரான்ஸ் வீரர்

கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரில் பிரான்ஸ் அணி நோர்வேயை 4 - 1 என்ற கோல் அடிப்படையில் வென்றுள்ளது.

பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பலே, போட்டியின் 7, 20 மற்றும் 32-வது நிமிடங்களில் கோல் அடித்து அபாரமான 'ஹெட்ரிக்' சாதனையை படைத்தார்.

இதன்படி, கால்பந்து செம்பியன்ஷிப் வரலாற்றில் மிக விரைவாக ஹேட்ரிக் அடித்தவர்களில் ஒருவராக அவர் இடம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று (9 புள்ளிகள்), 'குரூப் ஐ' பிரிவில் முதலிடம் பிடித்து பிரான்ஸ் அணி அடுத்த சுற்றிற்கு (சுழரனெ ழக 32) முன்னேறியுள்ளது.

நோர்வேயை பொறுத்தவரையில், ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால், குழு அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றில் ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொள்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes