வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அளுபோம்முல்ல காவல்துறைப் பிரிவில் வைத்து, நேற்றையதினம் ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூபா 20 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
41 வயதுடைய பாணதுறையை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி: அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் பதில் தாக்குதல்!
Local
27 June 2026
மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்
Local
27 June 2026
இலங்கையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை
Local
27 June 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
Local
27 June 2026
தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரிக்கும் தொற்றா நோய்கள்- எச்சரிக்கும் சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்!
Local
27 June 2026
எகிப்து மற்றும் ஈரான் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை
Local
27 June 2026
நியூசிலாந்து அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி
Local
27 June 2026
உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்: சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்
Local
27 June 2026
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
Local
27 June 2026
NDB வங்கி நிதி மோசடி விவகாரம்: 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன
Local
27 June 2026