General27 June 2026

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27) இடம்பெற்றது. இதன்போதே அவர் தலைவராக செய்யப்பட்டார்.

அதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக மருத்துவர் பண்டார வரகாகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த கூட்டத்தில், சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான நிறைவேற்றுக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes