General27 June 2026

மட்டக்குளியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!

மட்டக்குளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கங்காராம மாவத்தையில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மட்டக்குளி காவல்துறை நிலையத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தேகநபரை கைதுசெய்யும் போது 199 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes