General28 June 2026

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல -நிபுணர்கள் தெரிவிப்பு!

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் நடவடிக்கை, பயனுள்ள தீர்வு இல்லை என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த, எஅந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

புகை விசிறல் நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes