இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 120 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 629 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் அமீர் ஜங்கூ 233 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 194 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பின்னர் 318 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இந்தநிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!
Local
29 June 2026
தெஹ்ரான் - டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்
Local
29 June 2026
இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வி!
Local
29 June 2026
15 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் இலங்கையர்கள் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்!
Local
28 June 2026
நாகப்பட்டினம் துறைமுகத்தில் வரியில்லா சில்லறை விற்பனை நிலையங்கள்!
Local
28 June 2026
செம்மணி கொடூரங்களுக்கு நீதி கோரி 'உரிமைப்பந்தம்'மக்கள் எழுச்சி!
Local
28 June 2026
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை
Local
28 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!
Local
28 June 2026
பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி கண்டனம்
Local
28 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்; பெண் உட்பட ஐவர் கைது
Local
28 June 2026