General29 June 2026

தெஹ்ரான் - டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலக்குகள் மீது ஈரான் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்திய சில வாரங்களிலேயே, தெஹ்ரான் மற்றும் டுபாய்க்கு இடையிலான வானூர்தி சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெஹ்ரானின் இமாம் கொமெய்னி வானூர்தி நிலையத்தின் தலைவர் ராமின் கஷேஃபசார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தெஹ்ரான்-டுபாய் வானூர்திப் பாதையை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் செபெஹ்ரான் (Sepehran) வானூர்தி நிறுவனத்தின் இணையதளத்தில் திங்கட்கிழமை காலை 10:40 மணிக்கு (07:30 GMT) டுபாய் செல்லும் வானூர்திக்கான பயணச்சீட்டுகள் விற்பனைக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes