இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 1 ஓட்டத்தினால் அபார வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணியின் சார்பில் ஹரி டெக்டர் (Harry Tector) 53 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ப்ரின்ஸ் யாதவ் (Prince Yadav) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 155 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் திலக் வர்மா 55 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் அயர்லாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி
Local
29 June 2026
வெனிசுவேலாவில் நில அதிர்வு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
Local
29 June 2026
சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
Local
29 June 2026
இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அயர்லாந்து அணி!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை - யுனிசெப் எச்சரிக்கை
Local
29 June 2026
தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது
Local
29 June 2026
அழுத்தங்களுக்குப் பணியாத ஈரான் - உலகக்கிண்ண கால்பந்து அணியின் பயணம்
Local
29 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!
Local
29 June 2026
தெஹ்ரான் - டுபாய் வானூர்தி சேவை மீண்டும் ஆரம்பம்
Local
29 June 2026
இலங்கை அணிக்கு அதிர்ச்சி தோல்வி!
Local
29 June 2026