வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரு பெரும் நில அதிர்வுகளால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நில அதிர்வினால் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 3,150 பேர் காயமடைந்துள்ளதுடன், 12,721 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் 774 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருந்தாலும், அமெரிக்கா, கொலம்பியா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டெடுத்தது சில நம்பிக்கையான தருணங்களாக அமைந்தன.
நில அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகின்றது.
அமெரிக்கா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கத் தயாராகி வருகிறது.
இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், இது நாட்டின் வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகக் கொடூரமான இயற்கை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழலில் உயிர் காப்பதே அரசின் முன்னுரிமை என்று தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த இயற்கை பேரழிவு, ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ள வெனிசுவேலாவிற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
Latest News
முல்லைத்தீவில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது
Local
29 June 2026
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை
Local
29 June 2026
பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி
Local
29 June 2026
வெனிசுவேலாவில் நில அதிர்வு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
Local
29 June 2026
சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
Local
29 June 2026
இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அயர்லாந்து அணி!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை - யுனிசெப் எச்சரிக்கை
Local
29 June 2026
தாய்லாந்தில் 17 வயது சிறுமி, பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு: அவுஸ்திரேலியர் கைது
Local
29 June 2026
அழுத்தங்களுக்குப் பணியாத ஈரான் - உலகக்கிண்ண கால்பந்து அணியின் பயணம்
Local
29 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!
Local
29 June 2026