International29 June 2026

குறைந்தது தங்கத்தின் விலை : நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (29) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,065.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.75 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு தங்கச் சந்தையில் விலைகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் குறைவு ஏற்படக்கூடும் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்படும் இந்த மாற்றம், நகைத் தொழில், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரின் கொள்வனவு நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes