General29 June 2026

தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

கால்பந்து தொடரின் 'ரவுண்ட் ஓஃப் 32' (Round of 32) சுற்றில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட கனடா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி மிகச்சிறப்பாகத் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது, குறிப்பாக அந்த அணியின் கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் பல அபாயகரமான வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி காயம் காரணமாக ஓய்வில் இருந்த கனடா அணியின் நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸ் களமிறங்கியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

இறுதியாக, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், ஸ்டீபன் யூஸ்டாக்கியோ அடித்த கோல் கனடா அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தது.

இந்த வெற்றியின் மூலம் கனடா அணி கால்பந்து தொடரில் முதல்முறையாக நொக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது.

கனடா அணி தனது அடுத்த சுற்றில் நெதர்லாந்து அல்லது மொராக்கோ அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.

தென்னாப்பிரிக்க அணி கால்பந்து தொடரில் முதல்முறையாக நொக்-அவுட் சுற்று வரை முன்னேறி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes