International30 June 2026

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை: ஈரான் அறிவிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எதிர்வரும் நாட்களில் கட்டாரில் எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானியக் குழுவினர் டோஹாவுக்குச் செல்லவுள்ளனர்.

ஆனால், அவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்க மாட்டார்கள்.

இந்தக் குழுவினர் மேற்கொள்ளும் பயணத்தின் முக்கிய நோக்கம், ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்தணர்வு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமே ஆகும் என ஈரானின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் அமெரிக்கப் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் விஜயத்திற்கும், ஈரானியக் குழுவின் பயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes