தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஏரியில் தோணி கவிழ்ந்து விபத்து: 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Local
30 June 2026
அம்பாறை வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு – ஸ்னைப்பர் துப்பாக்கியும் சிக்கியது
Local
30 June 2026
"20 ரூபாய் குறைப்பால் மக்களுக்கு என்ன பயன்?" எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை என விமர்சனம்! நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பானது பொதுமக்களுக்கு எந்தவிதமான உண்மையான நிவாரணத்தையும் வழங்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை வெறும் 20 ரூபாயால் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் விலைகள் உயர்த்தப்பட்ட போது, தற்போதைய குறைப்பை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள், கையிருப்பில் உள்ளதால் உடனடியாக விலையைக் குறைக்க முடியாது என அரசாங்கத் தரப்பும் அமைச்சர்களும் சாக்குப்போக்கு கூறி வருகின்றனர். எனினும், சர்வதேச சந்தையில் குறைந்த விலைக்கு எரிபொருள் கிடைத்த காலத்தில், அதனை உள்நாட்டில் அதிக விலைக்கு விற்றது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சொற்ப விலை குறைப்பானது சந்தையில் பொருட்களின் விலைகளையோ, போக்குவரத்து கட்டணங்களையோ அல்லது மின்சாரக் கட்டணங்களையோ எந்த வகையிலும் பாதிக்காது. இதனால் சாதாரண மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Local
30 June 2026
குடிநீர் விநியோக மையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபானத்தயாரிப்பு: மாலபேயில் 2 கோடி ரூபாய் சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை! கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடம்பர வீடுகளைக் குறுகிய கால வாடகையடிப்படையில் பெற்று, எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி, சட்டவிரோதமாகப் பெருமளவில் மதுபானம் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வந்த பாரிய கடத்தல் கும்பல் ஒன்றை 'Hiru CIA' குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயங்கி வந்த இந்த ரகசிய மதுபான உற்பத்தி நிலையத்தை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அதிரடியாக முற்றுகையிட்டனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், இந்த அதிரடி முற்றுகையின் போது முதன்மைச் சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த இருமாடி வீட்டிற்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அங்கு அதிநவீன மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், போத்தல்களுக்கு மூடி போடும் கருவிகள் மற்றும் போத்தல்களில் ஒட்டுவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட பெருமளவிலான போலி லேபிள்களும் (Labels) கண்டெடுக்கப்பட்டன. மேல் மாகாண வடக்கு திசை குற்றப்பிரிவின் பணிப்பாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் சமிந்த தர்மரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை பரிசோதகர் பத்தும் அஞ்சன உள்ளிட்ட இரண்டு சிறப்பு அலகுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இந்த வெற்றிகரமான முற்றுகையை மேற்கொண்டனர். இந்த ரகசிய ஆலைக்குள் இருந்து சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத மதுபானப் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் எவ்வாறு எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி மதுபானத்தை நிரப்பி, அதற்கு இயந்திரங்கள் மூலம் மூடி போடுகிறோம் என்பதை காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே செய்து காண்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, இந்தச் சட்டவிரோத வியாபாரத்திற்குப் புகலிடம் கொடுத்த வீட்டின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களையும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Local
30 June 2026
"தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்குவது தான் முறைமை மாற்றமா ?" என சாடல்!
Local
30 June 2026
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை - ராகவா லோரன்ஸ்
Local
30 June 2026
ஹப்புத்தளையில் குளவி தாக்குதல் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
30 June 2026
கழிப்பறை குழி தோண்டியபோது சிக்கிய தொல்பொருட்கள்? - ஒருவர் கைது!
Local
30 June 2026
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு
Local
30 June 2026
ஜூன் 2026: பணவீக்கம் 6.8 சதவீதமாக அதிகரிப்பு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
Local
30 June 2026