General30 June 2026

ஜூன் 2026: பணவீக்கம் 6.8 சதவீதமாக அதிகரிப்பு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்கமானது குறிப்பிடத்தக்க உயர்வைச் சந்தித்துள்ளது.

அதன்படி, நாட்டின் முதன்மை பணவீக்கமானது மே மாதத்தில் 5.5 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பணவீக்கமானது மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. மே மாதத்தில் 0.9 சதவீதமாக இருந்த இது, ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து, 7.8 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தத் தரவுகள், அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை வெளிப்படுத்துவதான பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
Related recommendation
Hiru TV News | Programmes