General02 July 2026

18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி

தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரின், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4X800 மீற்றர் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், அந்த ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டப் பந்தய போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.

அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படும் இந்த போட்டித் தொடரில், நாடளாவிய ரீதியில் 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes