General08 July 2026

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்

கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் கைதிகளைக் குறிவைத்து அரசினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சிறைக்கலவரங்களுக்கும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"வெலிக்கடைச் சிறைக்கலவரம், பிந்துனுவேவ புனர்வாழ்வு முகாம் உயிரிழப்புக்கள் மற்றும் களுத்துறைக் கலவரங்கள் போன்றவை, திட்டமிட்ட இன ரீதியான தாக்குதல்களாகவே அமைந்தன.

1983 வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் உயிரிழந்த போதும், பிந்துனுவேவவில் 27 தமிழ் இளைஞர்கள் உயிரிழந்த போதும், அரச கட்டமைப்புகளே நேரடியாகத் துணைநின்றன என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன.

ஆனால், அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக்கலவரமானது, அரச காவல் கட்டமைப்பின் வினைத்திறனற்ற தன்மையையே உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்தகாலங்களில் தமிழர்கள் என்பதால் நீதி மறுக்கப்பட்ட நிலையை மாற்றி, நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்" என்று ரவிகரன் .
Related recommendation
Hiru TV News | Programmes