General08 July 2026

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு, இந்திய கடல் கடந்த பிரஜாவுரிமை  (OCI) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால், இந்த அட்டை கையளிக்கப்பட்டது.

புதிய நடைமுறையின் கீழ் வழங்கப்பட்ட முதல் அட்டை,

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அறிவித்த OCI நடைமுறை எளிமைப்படுத்தலின் கீழ், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் OCI அட்டை பெறுவதற்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது.

இந்த மாற்றத்தின் கீழ், இலங்கையில் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட OCI அட்டை இதுவாகும்.

இதன்போது, இந்திய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-OCI சேவையும் உயர்ஸ்தானிகரால் பிரதி அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்த டிஜிட்டல் முறைமையின் ஊடாக, அட்டைதாரர்கள் தமது கையடக்க தொலைபேசிகளிலேயே அட்டையைப் பயன்படுத்தி, எவ்வித சிரமமுமின்றி இந்தியாவிற்குப் பயணம் செய்ய முடியும்.

இந்த புதிய நடைமுறைகள், இலங்கை மற்றும் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையிலான இருதரப்பு உறவில் ஒரு முக்கிய முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes