International09 July 2026

அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்று (08) நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.50 அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.

அதேவேளை, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது நேற்று விட சுமார் 2 அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நீடித்தால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மேலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த நிலைமை பல நாடுகளின் எரிபொருள் இறக்குமதி செலவையும், உள்நாட்டு எரிபொருள் விலைகளையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes