மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெப்பநிலை அதிகரிப்பின் போது உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
டெங்கு பரவல் தீவிரம் - கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்
Local
09 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் வீழ்ச்சி!
Local
09 July 2026
இன்று 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
09 July 2026
அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Local
09 July 2026
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க விசேட இணையவழி செயலமர்வு
Local
09 July 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
Local
09 July 2026
அரச உத்தரவா? அல்லது தன்னிச்சையான முடிவா? - வசந்த முதலிகே கேள்வி
Local
09 July 2026
சிறைச்சாலையிலிருந்து கப்பம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது
Local
09 July 2026
ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என ட்ரம்ப் எச்சரிக்கை; கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரை
Local
09 July 2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றுமொரு கட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது!
Local
09 July 2026