கண்டி - தெல்தெனியவில் சிற்றூந்து ஒன்றினுள் உடலமாக மீட்கப்பட்ட பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், இன்று (09) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை காவல்துறை பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகிய நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
கடந்த ஜூன் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு, இன்று வரை விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் திகதி தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் சிற்றூந்து ஒன்றிலிருந்து குறித்த பெண் மருத்துவரின் உடலம் மீட்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
யாழ்.பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் - அவதூறு பரப்பும் செயல் : மாணவர் ஒன்றியம் கன்டணம்!
Local
09 July 2026
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
Local
09 July 2026
சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
Local
09 July 2026
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அசாதாரண நிலை - குற்றப்பிரதேசமாக பிரகடனம்
Local
09 July 2026
இலகு தொடருந்து திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு
Local
09 July 2026
பிரபல பாடகி பொனி டைலர் காலமானார்
Local
09 July 2026
வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
09 July 2026
சிறுவர்களைக் குறிவைக்கும் நுணுக்கமான குற்றங்கள்: பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
Local
09 July 2026
ஆண்டின் இறுதிக்குள் தனியார் துறை கடன் வளர்ச்சி பாதியாகுமா? – ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
Local
09 July 2026