General09 July 2026

தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் இருவருக்கு இடையே முறுகல் - காவல்துறையின் விசாரணைகள் ஆரம்பம்!

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் இரண்டு உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்றைய நகரசபை அமர்வின் போது, குறித்த இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் வலுப்பெற்று முறுகல் நிலை உருவாகியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் முரண்பாட்டில் ஈடுபட்ட நகரசபை உறுப்பினர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக இருவேறு முறைபாடுகளை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களிடையே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இரண்டு உறுப்பினர்களையும் காவல்நிலையத்துக்கு வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes