General13 July 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியானது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை வானூர்தி நிலையம் சென்றபோது கைதாகியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes