பூமியின் ஆழ்கடலுக்கு அடியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 73 புதிய எரிமலை பள்ளத்தாக்குகளை ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவை எதிர்காலத்தில் மீண்டும் வெடித்தால் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவை எதிர்காலத்தில் மீண்டும் வெடித்தால் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆழ்கடலை ஆய்வு செய்யப் பயன்படுத்தினர்.
இதன்போது, கடலின் அடிப்பகுதியில் எரிமலைகள் வெடித்த பின் சுருங்குவதால் ஏற்படும் 'கால்டெராஸ்' (Calderas) எனப்படும் 73 புதிய எரிமலை அமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இதுவரை கடலுக்கு அடியில் 30 எரிமலைகள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.எ
கண்டறியப்பட்டவற்றுள் 61 எரிமலைகள் டெக்டானிக் தட்டுகளின் மையப்பகுதியிலும், ஏனையவை கடலடி மலைத்தொடர்கள் மற்றும் எரிமலை வளைவுப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
கண்டறியப்பட்டவற்றுள் 61 எரிமலைகள் டெக்டானிக் தட்டுகளின் மையப்பகுதியிலும், ஏனையவை கடலடி மலைத்தொடர்கள் மற்றும் எரிமலை வளைவுப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
இவை தற்போது அமைதியாகக் காணப்பட்டாலும் இவை முழுமையாக அழிந்துவிடவில்லை. எதிர்காலத்தில் இவை மீண்டும் வெடிக்கும் பட்சத்தில் ஆழிப்பேரலை உள்ளிட்ட பயங்கரமான இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். சமீபத்தில் வெடித்த 'தொங்கா' (Tonga) எரிமலை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
அது ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்ததுடன், 148 அடி உயரத்திற்கு ஆழிப்பேரலையை உருவாக்கியது.
அது ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்ததுடன், 148 அடி உயரத்திற்கு ஆழிப்பேரலையை உருவாக்கியது.
தற்போது கண்டறியப்பட்டுள்ளவற்றில் 07 எரிமலைப் பள்ளங்கள் மிக அதிக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால்,அதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிர தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
18 ஆண்டுகால பயணத்திற்கு முற்றுப்புள்ளி : சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் ஸ்டீபன் பிளெமிங்!
Local
13 July 2026
ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரில் நடிகர் சாம் நீல் காலமானார்
Local
13 July 2026
நுளம்புக்கடியிருந்து பாதுகாப்பு: சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை - அமைச்சர் அறிவுறுத்தல்
Local
13 July 2026
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா
Local
13 July 2026
இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்
Local
13 July 2026
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்
Local
13 July 2026
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!
Local
13 July 2026
தங்க விலையில் மீண்டும் சரிவு – இன்றைய புதிய விலை விபரம்!
Local
13 July 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்
Local
13 July 2026
பேராபத்து காத்திருக்கிறதா? கடலுக்கு அடியில் 73 புதிய எரிமலைகள் கண்டுபிடிப்பு - ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
Local
13 July 2026