General14 July 2026

நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரின் கூற்றுக்கு எதிராகக் கடும் விமர்சனம்

நெல் கொள்வனவு திட்டத்தில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிடும் தரவுகள் பொய்யானவை என்றும் தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னக்கோன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய களஞ்சியசாலைகள் திறக்கப்படவில்லை எனவும், முறையான கேள்வி மனு கோரல் செயல்முறையுமின்றி ஒரு சில அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மட்டும் சாதகமாகச் செயற்படுவது விவசாயிகளைப் பாதிப்படையச் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடலற்ற செயற்பாடுகள் மற்றும் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் போக்குகளுக்கு அவர் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes