General14 July 2026

அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 68,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைக்கு மத்தியிலும், குப்பை முகாமைத்துவம் உள்ளிட்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அரசாங்கம் பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரே தீர்வு காணும் அணுகுமுறையை பின்பற்றி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes