General14 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறை அதிகாரிகள் மத்தியில் காணப்படும் நிர்வாக குறைபாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மை குறித்து கவலை வெளியிட்டார்.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், இவ்வாறான விடயங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை அவருக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் கடமை, பொறுப்புக்கள் தொடர்பில் முறையான கண்காணிப்பு அவசியம் எனவும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes