General15 July 2026

சுமதி விருதுகள் 2026: ஹிரு ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்

31 வது சுமதி விருது வழங்கும் விழா தற்போது ஜயவர்த்தனபுரவில் உள்ள தனியார் விருந்தக வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில், 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த செய்தி ஒளிபரப்பிற்கான விருதை ஹிரு நியூஸ் வென்றுள்ளது.

மேலும், ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு ஸ்டார் பெற்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடருக்கான விருதை ஹிரு டிவியின் "பாட்ட குருல்லோ" வென்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி  இசை நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு டிவியின் "ஜான" வென்றுள்ளது.

ஆண்டின் மிகவும் பிரபலமான Graphic Animation க்கான விருதை ஹிரு டிவி வென்றுள்ளது.

ஹிரு டிவியின் "பம்பரெக் எவித்" (Bambarek Awith) தொலைக்காட்சித் தொடரின் கலை இயக்குநரான சரத்சந்திர ஜயவீர, ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடர் கலை வடிவமைப்புக்கான விருதை வென்றுள்ளார்.

ஹிரு டிவியின் "பம்பரெக் எவித்" (Bambarek Awith) தொலைக்காட்சி தொடர் ஒப்பனைக் கலைஞரான புவனேக ரணவக்க, ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடர் ஒப்பனைக்கான விருதை வென்றுள்ளார்.

ஹிரு டிவியின் "பம்பரெக் எவித்" (Bambarek Awith) தொலைக்காட்சி தொடர் நடிகை வினு பெரேரா, ஆண்டின் வளர்ந்து வரும் நடிகைக்கான விருதை வென்றுள்ளார். 

ஹிரு டிவியின் "பம்பரெக் எவித்" (Bambarek Awith) நாடக தொடரின் நடிகை சஹேலி தாருல்யா (சூகிரி), ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை வென்றுள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes