Sports15 July 2026

'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!

கால்பந்து கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்தத் தோல்வி குறித்து பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியான் எம்பாப்பே தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த முக்கியமான போட்டியில் நாங்கள் நிறைய பிழைகளைச் செய்துவிட்டோம். எங்களால் திட்டமிட்ட வியூகங்களை களத்தில் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், கால்பந்து கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிக்குரிய தரத்தில் நாங்கள் விளையாடவில்லை.

இத்தகைய பெரிய போட்டிகளில் செய்ய வேண்டியவற்றைச் சரியாகச் செய்யத் தவறினால், நிச்சயம் வெற்றி பெற முடியாது.

எங்களது இறுதிப் போட்டி கனவு நிறைவேறாமல் போனதற்கு அணியின் தலைவராக நான் முழுப் பொறுப்பேற்கிறேன்,எனத் தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்துள்ளார்.



Related recommendation
Hiru TV News | Programmes