கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆரம்பித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான காதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்கு இணையாக 'பொலித்தீன் அற்ற புனித வலயங்கள் - 2030' (Polythene Free Sacred Zone - 2030) எனும் இந்த திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வருடம் முழுவதும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகை தருவதுடன், ஆடிவேல் உற்சவ காலப்பகுதியில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடுகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு, பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்து பக்தர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்புகளுக்கு எதிரான சோதனைகளை பலப்படுத்தவும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Latest News
பிரதியமைச்சர் டி.பி. சரத் கூறியது பொய்: உண்மை சரிபார்ப்பு அறிக்கை வெளியீடு!
Local
18 July 2026
ஜப்பான் பகிரங்க பூப்பந்தாட்டத் தொடர்: சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை
Local
18 July 2026
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - குடும்பத்தினரும் உடந்தையா ?
Local
18 July 2026
தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
Local
18 July 2026
தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி
Local
18 July 2026
LPL போட்டி முறைகேடு குற்றச்சாட்டு : Jaffna kings இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்
Local
18 July 2026
10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
Local
18 July 2026
கதிர்காம புனித பூமியை பிளாஸ்டிக் அற்ற வலயமாக்க 5 ஆண்டுத் திட்டம் ஆரம்பம்
Local
18 July 2026
உணவு தவிர்ப்பு போராட்டம் : சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில்
Local
18 July 2026
இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் - சீமான் சூசக அறிவிப்பு
Local
18 July 2026