2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடர், களத்தில் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, சமூக ஊடகங்களில் அவர்களைப் பெரும் நட்சத்திரங்களாகவும் மாற்றியுள்ளது.
இதன்படி நோர்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது யதார்த்தமான பதிவுகளால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
கடந்த 30 நாட்களில் மாத்திரம் அவர் சுமார் 29 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார்.
மேலும் வோசினியா, ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கோல்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், இவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திலிருந்து 29.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அத்துடன் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் தனது மனநலம் குறித்த வெளிப்படையான கருத்துக்களால் அனைவரது அன்பையும் பெற்று, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
ஸ்பெயின் அணி வீரர் லமின் யமால் மைதானத்திலும், குடும்பத்தினருடனான நெருக்கமான தருணங்களை பகிர்ந்து கொள்வதிலும் தனித்து நிற்கும் இந்த 19 வயது இளைஞர், 49.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
மேலும் நியூசிலாந்து வீரர் டிம் பெயின் ஆர்ஜென்டினாவினரின் வைரல் காணொளியினால், 5,000 பின்தொடர்பவர்களிடமிருந்து 5.8 மில்லியனாக உயர்ந்து, இந்த தொடரின் மிகவும் எதிர்பாராத வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
களத்திறமை மற்றும் தனிப்பட்ட கதைகள் மூலம் இந்த வீரர்கள் உலகக் கிண்ணக் காலத்தில் சமூக ஊடகங்களில் புதிய சகாப்தத்தைப் படைத்து வருகின்றனர்.
Latest News
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் - வரலாறு படைத்த எம்பாப்பே
Local
19 July 2026
மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!
Local
19 July 2026
மனவலிமையால் ஜொலிக்கும் யாஸ்திகா பாட்டியா!
Local
19 July 2026
இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட முக்கிய கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழாவில் சினிமா பாடல்கள்,ஆடல் பாடல்களுக்கு தடை!
Local
19 July 2026
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து - பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி!
Local
19 July 2026
கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஸ்பெயின் அணியின் பயிற்சி அமர்வு இரத்து!
Local
19 July 2026
2 முக்கிய பிரிவுகளில் தேசிய விருதை வென்ற புஷ்பா 2
Local
19 July 2026
தவறான திசையில் செல்லும் அமெரிக்கா - முன்னாள் கடற்படை அதிகாரி எச்சரிக்கை!
Local
19 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
19 July 2026