புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு நடவடிக்கை இன்றுடன் (22) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, இலங்கை மின்சார சபையின் பின்தொடர் நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படும் மின்சாரத்திற்கான விலைகள் மற்றும் விலைச் சூத்திரங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகளின் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த ஆறு மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரக் கொள்முதல் விலை, இந்தக் கருத்துக்கேட்பு செயற்பாட்டின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் பெருநிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரிப் பொருள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைச் சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் மின்சார விலைகளை நிர்ணயிப்பது குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்புச் செயற்பாடு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, விலை நிர்ணயச் செயற்பாட்டிற்குத் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Latest News
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
22 July 2026
தங்கப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி : இலங்கையில் கிடுகிடுவென அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
22 July 2026
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை
Local
22 July 2026
குசல் மெண்டிஸுக்கு காயம் – அடுத்த LPL போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்
Local
22 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் : சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
Local
22 July 2026
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் விலைகள் - பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்றுடன் நிறைவு
Local
22 July 2026
அவசர பராமரிப்புப் பணி: இன்று குருணாகல் - கண்டி ஆகிய பகுதிகளில் 4 மணி நேரம் நீர் விநியோகத் தடை!
Local
22 July 2026
வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்: தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு
Local
22 July 2026
கல்கிஸ்ஸை - டெம்ப்பள் வீதியில் துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிப்பு!
Local
22 July 2026
இலங்கையில் மீண்டும் தீவிரமாகும் டெங்கு அபாயம் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்!
Local
22 July 2026