இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
அத்துடன், ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Latest News
சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!
Local
24 July 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
Local
24 July 2026
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Local
24 July 2026
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஒஸ்திரிய அரசு
Local
24 July 2026
பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலாளராக இலங்கைத் தமிழரான உமா குமரன் நியமனம்!
Local
24 July 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
Local
24 July 2026
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்
Local
24 July 2026
7 நாட்களில் இத்தனை கோடி வசூலா?: சாதனை படைக்கும் ‘தி ஒடிசி’
Local
24 July 2026