நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!
Local
23 July 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு
Local
23 July 2026
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Local
23 July 2026
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்
Local
23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
Local
23 July 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
Local
23 July 2026
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026