இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான நால்வரும் சமூக வலைதளங்களில் காணொளிகளை வெளியிட்டு, தங்களது திருமணம் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.
Latest News
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் இனி குற்றம்: புதிய சட்டத்தின் விதிகள் என்ன?
Local
27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்
Local
27 July 2026
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!
Local
27 July 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026
பெர்லின் தாக்குதல் சந்தேகநபர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
Local
26 July 2026
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!
Local
26 July 2026
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026