தனது இணைய உள்ளடக்க உருவாக்கம் (Content creation) மூலம் கிடைத்த முதல் வருமானத்தைக் கொண்டு, தந்தைக்குப் புதிய பாதணிகளைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மும்பையைச் சேர்ந்த கேஷவ் நாராயண் பிஷ்ட் (Keshav Narayan Bisht) என்ற சமூக வலைதளப் படைப்பாளரின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது.
"அப்பா, நீங்கள் விலைமதிப்பற்றவர்" என்ற நெகிழ்ச்சியான வரிகளுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
புதிய கெமரா ஒன்றை வாங்க வெளியே செல்வதாகக் கூறித் தனது தந்தையை அழைத்துச் சென்ற கேஷவ், எதிர்பாராதவிதமாக அவரை ஒரு பாதணி விற்பனையகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மின்சாதனப் பொருட்கள் விற்பனையகம் செல்வோம் என்று எதிர்பார்த்து வந்த தந்தை, பாதணிக் விற்பனையகத்தை கண்டதும் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்.
தான் ஈட்டிய முதல் வருமானத்தில் தனக்காக எதையும் வாங்காமல், தந்தையின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் அவருக்குப் புதிய பாதணிகளை வாங்கித் தந்த மகனின் இந்த அன்புச் செயல் இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 2 சந்தேகநபர்கள் கைது!
Local
25 July 2026
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Local
25 July 2026
ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!
Local
25 July 2026
கலிபோர்னியாவில், பார்வையற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறிய ஆந்தை ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Local
25 July 2026
பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
25 July 2026
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026