2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்காள்ள முடியும் என்றும், இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அதிபர்கள் தமது வலயத்தில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான கல்விப் பிரதி அல்லது உதவிப் பணிப்பாளரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அதே இணையத்தளத்திற்குச் சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் மேற்கொள்ளலாம்.
ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்குக் பின்னர் மேலும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911, தொலைபேசி இலக்கங்களான 0112784208 அல்லது 0112784537, தொலைநகல் 0112784422 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.
Latest News
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!
Local
27 July 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026
பெர்லின் தாக்குதல் சந்தேகநபர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
Local
26 July 2026
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!
Local
26 July 2026
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026