International24 July 2026

சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!

சீனாவும் அமெரிக்காவும் சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுடன், அவற்றை விரைவில் செயற்படுத்த அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சீன வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு முதலீட்டுத் துறையின் தலைவர் மெங் ஹவாடிங் (Meng Huating), செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தற்போது, ​​சீனா-அமெரிக்கப் பொருளாதார வர்த்தகக் குழுக்கள், வர்த்தக மன்றத்தின் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் இயக்க மாதிரி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து நெருக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பரஸ்பர சுங்கவரிக் குறைப்புக்கான ஒரு கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரண்டு தரப்பினரும் விவாதித்து வருவதாக மெங் ஹவாடிங் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes