2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17க்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
Latest News
நடிகர் ராம்சரணுக்கு வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை!
Local
28 July 2026
லண்டன் 'நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி'யில் சேர்க்கப்பட்ட பாடகியின் படம் : யார் தெரியுமா?
Local
28 July 2026
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலை
Local
28 July 2026
போருக்கும் சமாதானத்துக்கும் மத்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
Local
28 July 2026
மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!
Local
28 July 2026
கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி!
Local
28 July 2026
சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை - 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை
Local
28 July 2026
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு: 15க்கும் மேற்பட்டோர் காயம்
Local
28 July 2026
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026