இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அவர்கள் இலங்கையின் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என இராமேஸ்வரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும், அதற்காகச் சுமார் 3 லட்சம் ரூபாய் செலுத்தி தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை அடைந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகள் இலங்கையில் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
நிதி பற்றிய குழுவின் அறிக்கை உண்மையை மூடிமறைக்கிறது - ஐ.தே.க சாடல்
Local
26 July 2026
சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?
Local
26 July 2026
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித்துக்கு அழைப்பு!
Local
26 July 2026
மக்களே தீர்மானிக்க வேண்டும்: சர்வஜன வாக்கெடுப்பு கோரும் நாமல்!
Local
26 July 2026
'ஜனநாயகன்' பார்க்க சென்ற விஜய் மனைவி சங்கீதா : வைரல் காணொளியின் உண்மை என்ன?
Local
26 July 2026
இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பரவல்
Local
26 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Local
26 July 2026
சான் டியாகோ கொமிக்-கோன் 2026 : மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
Local
26 July 2026
சி.எஸ்.கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார்? இறுதிக்கட்டத்தில் தேர்வு – தோனி தீவிர ஆலோசனை!
Local
26 July 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா!
Local
26 July 2026