லண்டனில் உள்ள பிரபல மெரியட் விடுதியில் சவுதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன.
விடுதி அறையின் குளியலறையில் மயங்கிய நிலையில் இளவரசரை கண்ட பணியாளர்கள், உடனடியாக அவசர மருத்துவ சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெளியாகியுள்ள உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமான மதுபான அளவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆபத்தான அளவிலான 'GHB' எனப்படும் போதைப்பொருள், கஞ்சா மற்றும் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் 'Xanax' மாத்திரைகளின் கலவையும் அவரது உடலில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நச்சுப் பொருட்களின் கலவையால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு அவரது மரணத்திற்கான காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக இளவரசர் லண்டனில் உள்ள பிரபல மறுவாழ்வு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், அவரது மரணம் உயிர்மாய்ப்பு அல்ல என்றும், அதிகளவிலான போதைப்பொருள் கலவையால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து மரணம் என்றும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
சிறந்த விடயங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் - முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஜெய்!
Local
26 July 2026
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை!
Local
26 July 2026
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்!
Local
26 July 2026
ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!
Local
26 July 2026
ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!
Local
26 July 2026
எபோலா வைரஸ் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 கடந்தது!
Local
26 July 2026
ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!
Local
26 July 2026
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Local
26 July 2026
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026