இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
Latest News
ஆடிவேல் உற்சவம் - பொதுமக்கள், சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
27 July 2026
நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
LPL ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: ஜஃப்னா கிங்ஸ் அணி இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
Local
27 July 2026
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Local
27 July 2026
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!
Local
27 July 2026
அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!
Local
27 July 2026
சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
Local
27 July 2026
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
Local
27 July 2026
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
Local
27 July 2026