இந்த ஆண்டில் இதுவரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாத்திரம் 257 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தீயணைப்புச் சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாத்திரம் ராஜகிரிய, ஒபேசேகரபுர வீதி மற்றும் ஹோமாகம, ஜய மாவத்தை ஆகிய பகுதிகளில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு கொழும்பில் மாத்திரம் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், இந்த ஆண்டில் இதுவரை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 257 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததும், குடியிருப்புகளிலும் பணியிடங்களிலும் நடைபெறும் பாதுகாப்பற்ற மின்சாரச் செயல்பாடுகளுமே இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கியக் காரணங்களாகும்.
மேலும், இரசாயனப் பொருட்களை முறையற்ற முறையில் சேமித்து வைப்பதும் மற்றொரு காரணமாகும்.
இந்தநிலையில், எந்தவொரு அவசரத் தீ விபத்துச் சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் உடனடியாக 110 என்ற துரித தொலைபேசி இலக்க ஊடாகத் தீயணைப்புச் சேவைத் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!
Local
26 July 2026
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026
மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு யுவதிகள் மீது மோதிய காவல்துறை உயரதிகாரி கைது!
Local
26 July 2026
தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்!
Local
26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!
Local
26 July 2026