General27 July 2026

கொத்தட்டுவையில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் மோதி விபத்து: ஒருவர் பலி!

கொழும்பு - கொத்தட்டுவ பகுதியில் இன்று காலை (27) முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவையிலிருந்து கொத்தட்டுவ நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes