தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பலத்த காற்று காரணமாக வீடுகளின் கூரைகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் சேதமடையக்கூடும் என்பதுடன், மரங்களின் கிளைகள் முறிந்து விழுதல் அல்லது மரங்கள் வேரோடு சாய்வதனால் பொதுமக்களுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பயிர்களுக்கும் சேதம் ஏற்படக்கூடும் என்பதுடன், தாழ்நிலக் கடலோரப் பகுதிகள் கடல் அலைகளினால் பாதிக்கப்படும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.
இதன்காரணமாக துறைமுகங்களுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள படகுகள் மோதிக்கொள்வதனால் சேதமடையும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Latest News
மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!
Local
28 July 2026
கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி!
Local
28 July 2026
சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை - 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை
Local
28 July 2026
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு: 15க்கும் மேற்பட்டோர் காயம்
Local
28 July 2026
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
Local
28 July 2026
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026
கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!
Local
28 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
28 July 2026