General28 July 2026

ரோஹித்துடன் வைபவ் சூர்யவன்ஷி? முன்னாள் வீரர் அதிரடி யோசனை!

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற முழுத் தகுதியுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலது மற்றும் இடதுகை துடுப்பாட்ட கலவை அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், ஷுப்மன் கில் 4ஆம் இடத்தில் களம் இறங்குவது மத்திய வரிசையைப் பலப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் விராட் கோலி 3ஆம் இடத்தில் களமிறங்கலாம் என்றும் ஃபரூக் என்ஜினியர் யோசனை தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes